About this app
இந்த செயலியில் விளம்பரங்கள் இல்லை.
ஜோதிடம் பார்ப்பதன் மூலம், உங்களுடைய முன் ஜென்மம் (நீங்கள் இறந்த விதம் மற்றும் அதன் காரணம்), எதிர்காலம், யோகங்கள் மற்றும் கண்டங்கள் ஆகியவற்றைத் துல்லியமாக MP3 audio file வாயிலாகக் கேட்கலாம். அகத்தியர் வழிநின்று நாங்கள் கணிப்பது சரியாக இருந்தால், உங்களால் இயன்றதை நன்கொடையாக அளிக்கலாம்.
12 ராசிக்கும், தினமும் ராசி பலன்கள் முற்றிலும் இலவசமாக வழங்க்கப்படுகிறது.
நவகிரகங்களை மட்டும் வைத்து பலன் சொல்லாமல், மாந்தி (அ) குளிகன் எனப்படும் பத்தாவது கிரகத்தையும் கணக்கில் வைத்து பலன் சொல்வதால், எங்களுடைய கணிப்பு மிகவும் துல்லியமாக இருக்கும்.
ஆண், பெண் ராசிகள் :
மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகியவை ஆண் ராசிகள் எனப் படும். ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவை பெண்ராசிகள் எனப்படும். ஆண்ராசிகளை இலக்கினமாகக் கொண்டவர்கள் ஆணின் குணாதிசங்கள் அதிகம் உள்ளவர்கள் எனக் கொள்ளலாம். உதாரணமாக மேஷ இலக்கினத்தில் ஒரு பெண் பிறந்து இருப்பாரேயாகில் அவருக்கு ஆண்களின் குணாதிசியங்கள் அதிகம் இருக்கும் எனக் கொள்ளலாம். சிறிது முன் கோபமும் முரட்டுத்தன்மை உடையவராக இருப்பார் எனக் கொள்ளலாம். அதேபோல் ஒரு பெண்ரசியில் ஒரு ஆண் பிறந்து இருப்பரேயாகில் அவருக்குப் பெண்களின் குணாதிசயங்கள் இருக்கும் எனக் கொள்ளலாம். சிறிது பயந்த சுபாவம் உள்ளவராகவும் கூச்ச சுபாவம் உள்ளவராகவும் இருப்பார் எனக் கொள்ளலாம். ஆண்ராசியில் உள்ள கிரகங்கள் தங்கள் தசாபுக்தி காலங்களில் ஆண் சந்ததியையும், பெண்ராசியில் உள்ள கிரகங்கள் தங்கள் தசா, புக்தி காலங்களில் பெண்சந்ததியையும் கொடுக்கும். பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணாவென்று அறிய இந்த ராசிகள் பயன் படும். ஒருவர் ஜாதகத்தில் 5-ம் வீடு ஆண்ராசியாகி, 5-க்குடையவர் ஆண்கிரகமாக இருந்து அவரும் ஆண் ராசியில் இருப்பாரேயாகில் அவருக்கு ஆண் சந்ததிகள் அதிகம் இருக்கும் என்று கூறலாம். 5-ம் வீடு பெண்ராசியாகி, 5-க்குடையவர் பெண் கிரகமாகி அவர் பெண் ராசியில் இருப்பாரேயகில் அவருக்கு பெண் குழந்தைகள் அதிகம் இருக்கும். வடக்கு, தெற்கு, ராசி, பாகுபலி, காலா, சினிமா, கிரிக்கெட், ரஜினி, அரசியல், கமல், நடிகர் & நடிகை, சென்னை, கோவை, பொள்ளாச்சி, தமிழ், தமிழ்நாடு, விவசாயி, வேலை, சோழ, சேர, பாண்டிய, பல்லவ.
ஜனன காலத்தில் சந்திரன் இருக்கும் நட்சத்திரம் ஆரம்பகால தசை
1. அஸ்வனி, மகம், மூலம் கேது தசை
2. பரணி, பூரம், பூராடம் சுக்கிரன் தசை
3. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் சூரியன் தசை
4. ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் சந்திரன் தசை
5. மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் செவ்வாய் தசை
6.திருவாதரை, ஸ்வாதி, சதயம் ராகு தசை
7.புனர்ப்பூசம், விசாகம், பூரட்டாதி குரு தசை
8.பூசம், அனுஷம், உத்திரட்டாதி சனி தசை
9.ஆயில்யம், கேட்டை, ரேவதி புதன் தசை
நமது இந்து மதம் மறு பிறவியை வலியுறுத்துகிறது. உடலுக்குத்தான் அழிவே தவிர ஆன்மாவிற்கு இல்லை. உடலில் இருந்து உயிர்போன பின்பு உடல் அழிக்கப் படுகிறது.ஆனால் ஆன்மாவோ வேறு வடிவம் எடுக்கிறது. இது தான் நமது இந்து மத தர்மம். இந்தப் பிறவியில் நாம் வாழ்வதோ தாழ்வதோ போனபிறப்பில் செய்த பாவ புண்ணியங்களைப் பொருத்தே அமைகிறது. நல்லது செய்தவர் இந்த ஜென்மத்தில் நல்லதை அனுபவிப்பார். பாவங்கள் செய்தவர் அதற்கு ஏற்றார் போல் கஷ்டங்களை அனுபவிப்பார். இதுதான் ஊழ்வினை என்பது. இதைப் பற்றி சிலப்பதிகாரம் விளக்கமாகவே கூறுகிறது.
தமிழ் 60 ஆண்டுகள்
பிரபவ , விபவ , சுக்கில , பிரமோதூத , பிரஜோத்பத்தி, ஆங்கீரஸ , ஸ்ரீமுக , பவ , யுவ , தாது , ஈஸ்வர , வெகுதான்ய, பிரமாதி , விக்கிரம , விஷ¤ , சித்ரபானு , சுபாணு, தாரண , பார்த்திப , விய , சர்வகித்து , சர்வதாரி, விரோதி , விக்ருதி , கர , நந்தன , விஜய , ஜய, மன்மத் , துர்முகி , ஹேவிளம்பி , விளம்பி , விகாரி, சார்வரி , பிலவ , சுபகிருது , சோபகிருது , குரோதி, விசுவாசு , பராபவ , பிலவங்க , கீலக , சௌமிய, சாதரண , விரோதிகிருது , பரிதாபி , பிரமாதீச, ஆனந்த , ராஷஸ , நள , பிங்கள , காளயுக்தி, சித்தாத்திரி , ரௌத்திரி, துன்பதி , துந்துபி, ருத்ரோகாரி , ரக்தாஷி , குரோதன & அக்ஷய.
ஜோதிட சாஸ்த்திரம் வேதங்களோடும், பஞ்சபூதங்களோடும், நவக்கிரங்களோடும், நட்சத்திரங்களோடும், வானியல் கணிதங்களோடும், முற்பிறவி, மறுபிறவி இவற்றோடும்,
பாவபுண்ணியம் இவற்றோடும், கர்மபலனோடும், தெய்வ வழிபாட்டோடும், பரிகாரங்களோடும் தொடர்புடையது.